Wednesday, February 1, 2012

என் அப்பாவின் கவிதைகள்...


                   அப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு நோட்டு கிடைத்தது. அதில் சில கவிதைகளைப் பார்க்கமுடிந்தது. அப்பா அழகாகப் படம் வரைவார்கள். எழுத்து அழகாக இருக்கும். கலையுணர்ச்சியோடு எதையும் செய்வார்கள். நான் எம்.ஏ படித்தபோது வீட்டில ஒரு பெயர்ப்பலகை வைத்தேன். அதன்பின் தொடர்ந்து நான் படித்த படிப்புக்களையெல்லாம் நான் முடித்தவுடம் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி எழுதி என் பெயருக்குப் பின்னால் ஒட்டியது நினைக்கையில் மனம் கசிகிறது.

                   இப்போது அந்த குறிப்பேடு என் சகோதரியிடம் உள்ளது. அதனைப் பெறமுடியாத சூழலும் உள்ளது. அதில் இருக்கும் கவிதைகள் எல்லாம் வேடிகக்கையானவை மருத்துவ சிகிச்சை பற்றிய வேடிக்கைக் கவிதைகள். வாய்ப்பு அமையும்போது எல்லாக் கவிதைகளையும் பதிகிறேன். இப்போது சான்றுக்கு மட்டும் நினைவில் இருப்பதைக் குறிப்பிடுகிறேன்.

                 
                          தலைவலிக்கு மருந்து (கவிதை)

               
                         தலைவலி கண்டதென்று
                         தவிக்கின்ற மனிதர்காள்
                         தயவுடன் மருந்தைக் கேளீர்
                 
                         மலைதனில் பெருத்தத்தக்கக்
                        கல்லைத் துர்க்கி வந்து
                         தலைவலி உள்ள பேர்
                         தலையைத் தாங்கி
                         ஓங்கியே போட்டால்
                         தலைவலி தீர்ந்து
                         சொல்லாமலே துர்ங்குவார்..


                                             மருந்து கிரயம் 4 அணா (1952 இல் எழுதியது)

இன்னுமொரு கவிதை...

                               
                               சகல ரோக நிவாரணி


                               தஞச்ர்வூர் தலையாட்டி
                               மன்னார்குடி மண்வெட்டி
                               கும்பகோணம் கோமுட்டி
                               உலக்கைக் கொழுந்து
                               சித்தானை வேரு

                               குடிபோன வீட்டில்
                               அடிபோன சட்டியை எடுத்து
                               வாயோடு சேர்த்து
                               ஆயிரம் பொத்தலிட்டு,,,,

                               பதக்கு தண்ணீரை எடுத்து
                               உழக்குத் தண்ணீராக்கி
                               சுண்ட வைத்து
                               உள்ளங்கையில் வைத்து
                               புறங்கையை நுர்றுமுறை நக்க

                               எந்த வியாதியும் பட்டென்று
                               போகும்..

                                யாரிடமும் சொல்லாதே,,,

                                                                    கிரயம் இரண்டனா,,,


                     முழுக்கவிதை மறந்துவிட்டது. ஆனால் எல்லாம் வேடிககையாக இருக்கும், முழுக்க முழுக்க நகைச்சுவையாகப் படிப்பதற்கு.

                         குறிப்பேடு கிடைத்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன். அப்பா இறந்த பிறகுதான் ஒவ்வொரு நாளும் அப்பாவின் நினைவு படுததிக்கொண்டிருக்கிறது. அவரைப் பற்றிய நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.